உங்கள் கடனட்டைக்கான கொடுப்பனவை செலுத்துதல்

உங்கள் கடனட்டைக்கான கொடுப்பனவை செலுத்துதல்
உங்கள் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கடன் அட்டைகளுக்கான கொடுப்பனவை எவ்வாறு மேற்கொள்வது?

 

 

டிஜிட்டல் முறையினூடாக எம்மை அணுகவும் – அது துரிதமானது, பயன்படுத்த இலகுவானது மற்றும் பாதுகாப்பானது. வீட்டிலிருந்தவாறே உங்கள் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கடன் அட்டைகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம்.

நேஷன்ஸ் ஒன்லைன் வங்கிச் சேவை மற்றும் நேஷன்ஸ் மொபைல் app ஊடாக உங்களுக்கு நாம் சேவைகளை வழங்க தயாராகவுள்ளோம். இதன் மூலம் உங்கள் கணக்குகளை இலகுவாகவும் துரிதமாகவும் அணுக முடியும்.

எம்முடன் நீங்கள் சேமிப்பு அல்லது நடைமுறை கணக்கொன்றை கொண்டிருந்தால், அவற்றிலிருந்து பணத்தை பாதுகாப்பாகவும் இலகுவாகவும் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் இவற்றுக்கு பதிவு செய்திருக்காவிடின், பதிவு செய்து கொள்வதும் இலகுவானது:

PLAY
apple

 

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியுடன் நீங்கள் கணக்கொன்றை கொண்டிருக்காவிடின், பின்வரும் முறைகளினூடாக எப்போதும் உங்களால் கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம்.

  • FriMi App - FriMi app ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள www.frimi.lk எனும் இணையத்தளத்தை பார்க்கவும்.
  • உங்கள் சொந்த வங்கிக் கணக்கின் மூலம் ஒன்லைன் அல்லது மொபைல் வங்கிச்சேவை ஊடாக சேவைகளைப் பெற இங்கே க்ளிக் செய்யவும். 

 

  • கீழே தரப்பட்டுள்ள எந்தவொரு நிதிச் சேவை வழங்குநரிடமிருந்தும் நீங்கள் ஒன்லைன் அல்லது மொபைல் வங்கிச் சேவையை கொண்டிருந்தால், உங்கள் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கடன் அட்டைக்கான கொடுப்பனவை CEFT பண மாற்ற முறையினூடாக மேற்கொள்ளலாம்.
  • அனுகூலம் பெறும் கணக்கு இலக்கம் (Beneficiary account) எனும் பகுதியில் உங்கள் கடன் அட்டை இலக்கத்தையும், அனுகூலம் பெறும் பெயர் (Beneficiary name) எனும் பகுதியில் அட்டையிலுள்ள பெயரையும் பதிவு செய்யவும்,
  • அனுகூலம் பெறும் வங்கி (Beneficiary bank) என்பதில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தலைமையகம் / பொது (Nations Trust Bank Head office/General) என்பதை தெரிவு செய்யவும்.
  • கொடுப்பனவு தொகையை பதிவு செய்து பரிமாற்றத்தை முன்னெடுக்கவும்.

இங்கே க்ளிக் செய்யவும்.

  • எந்தவொரு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கிளை அல்லது ATM ஊடாக.