இந்த தனியுரிமைக் கொள்கை ("கொள்கை" என்றும் அறியப்படும்) 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு கட்டுப்பாட்டாளர் என்ற வகையில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி மூலம் செயன்முறைப்படுத்தப்படும் போது தரவுடன் தொடர்புபட்டோரின் தனிப்பட்ட தரவுகளுக்கு ஏற்புடையதாகும். இக்கொள்கை பின்வருவனவற்றை விளக்குகின்றது:
- நாங்கள் உங்களைப் பற்றி என்ன தகவல்களை சேகரிக்கின்றோம்
- அந்த தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகின்றோம்
- அந்த தகவல்களை யாருடன் பகிர்கிறோம்
- எப்போது அந்த தகவல்களை பகிரக்கூடும்
- அந்த தகவல்கள் தனியுரிமையுடனும் பாதுகாப்புடனும் இருப்பதை உறுதி செய்ய நாம் எடுக்கும் நடவடிக்கைகள்
- நீங்கள் எங்களிடமிருந்து ஏதேனும் தயாரிப்பு அல்லது சேவையைப் பெற வினவல்கள் செய்யும்போது
- நீங்கள் எங்களிடமிருந்து ஏதேனும் தயாரிப்பு அல்லது சேவையை பெற்றுள்ள வாடிக்கையாளர் ஆவீர்கள் என்றால்
- நீங்கள் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சியின் வாடிக்கையாளர் அல்லாதவராக மாறிய பிறகும்
உங்களுக்கு முன்கூட்டி அறிவித்தல் வழங்கி அல்லது வழங்காது இக்கொள்கை காலத்திற்கு காலம் இற்றைப்படுத்தப்படலாம்.
இந்த கொள்கையில் “நாங்கள்”, “எங்கள்” அல்லது “எங்களை” என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது, அது நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி ஐ குறிப்பதாகும். இது தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்புச் சட்டத்திற்மைவாக கட்டுப்பாட்டாளராகக் கருதப்படும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சியைக் குறிக்கின்றன.
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம், கட்டுப்பாட்டாளர் என்பது தனியாகவோ அல்லது மற்றவர்களுடன் கூட்டாக இணைந்து, தனிப்பட்ட தரவுகளை செயன்முறைப்படுத்தும் நோக்கங்கள் மற்றும் முறைகளை தீர்மானிக்கும் நிறுவனம் அல்லது நபர் ஆகும். அடிப்படையில், தனிப்பட்ட தரவுகள் ஏன் மற்றும் எவ்வாறு செயன்முறைப்படுத்தப்படுகின்றன என்பதை தீர்மானிப்பதற்கும், தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்துடன் இணங்குவதை உறுதிசெய்வதற்கும், பொறுப்பேற்கும் பிரதானவர்கள் கட்டுப்பாட்டாளர்களாவார்கள்.
“எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்”என்ற தலைப்பிலுள்ள பிரிவைப் பார்வையிட்டு, எங்களை எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை அறியவும்.
இந்தக் கொள்கையில் “நீங்கள்” அல்லது “உங்கள்” என்றால், கீழ்காணும் யாரையும் குறிக்கலாம்:
- நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பீஎல்சியின் எவரேனும் சாத்தியமான, ஏற்கனவே உள்ள அல்லது கடந்த கால வாடிக்கையாளர்
- தற்போதைய அல்லது முந்தைய வாடிக்கையாளரின் கணக்கில் அங்கீகரிக்கப்பட்ட நபர்
- எதிர்பார்க்கப்படும், தற்போதைய அல்லது முந்தைய வாடிக்கையாளருக்காக வங்கிச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் நபர்கள் (உதாரணமாக அதிகாரப்பூர்வ பத்திரம் பெற்ற நபர்கள், வழிகாட்டிகள்)
- எங்கள் நிறுவன வலைத்தளத்திற்கு வருகை தரும் எந்தவொரு நபரும்
- எங்கள் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களை பார்வையிடும் எந்தவொரு நபரும்
இக்கொள்கையில், உங்களை ஒரு "தரவுடன் தொடர்புபட்டவர்”ஆக நாம் கருதுகிறோம். தரவுடன் தொடர்புபட்டவர் என்பது தனிப்பட்ட தரவுகள் தொடர்புடைய நபரைக் குறிக்கும். நிறுவனங்கள் மற்றும் கம்பனிகள் போன்ற சட்டப்பூர்வ நபர்கள் மற்றும் வேறு ஏதேனும் தனிப்பட்ட அல்லாத தரவுகள் தொடர்பான தரவுகளை நாம் செயன்முறைப்படுத்தும் போது இக்கொள்கை ஏற்புடையதாகாது.
தயாரிப்புகள் அல்லது சேவைகள் என்றால், எங்களால் வழங்கப்படும் சேமிப்புக் கணக்குகள், நடப்புக் கணக்குகள், கடன் வசதிகள், கடன் அட்டைகள், வீட்டு கடன்கள், முதலீடுகள் போன்ற எங்களால் வழங்கப்படும் ஏதேனும் தயாரிப்பை அல்லது சேவையை குறிக்கின்றது.
உங்களுடன் தொடர்பு கொள்ளும் போது, உங்கள் நிதி தேவைகளை நாங்கள் புரிந்துகொள்வதற்கும் எங்கள் வணிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தேவையானதாகவும் தொடர்புடையதாகவும் நாங்கள் நம்பும் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். மேலும் அத்தகைய தகவல்களைச் செயன்முறைப்படுத்துதல் ஏற்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேற்கொள்ளப்படும்.
பொதுவாக, நீங்கள் ஒரு தயாரிப்பு அல்லது சேவைக்கு விண்ணப்பிக்கும் போது அல்லது கோரும் போது, எமது விளம்பரம் அல்லது நேரடி அஞ்சலில் பதிலளிக்கும் விதமாக எமது சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் அல்லது கணக்கெடுப்புகளில் பங்கேற்கும்போது, அல்லது எங்களுடன் வேறு பரிவர்த்தனைகள் இருக்கும்போது போன்ற சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட தகவல்களை நாம் உங்களிடமிருந்து நேரடியாக சேகரிக்கின்றோம். தொலைபேசி அல்லது இணையம் மூலமாகவோ, நேரில் (நீங்கள் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கிளையில் அல்லது தொடர்புடைய முகவர்கள் மூலம் எங்களைச் சந்திக்கும் போது) மற்றும் நீங்கள் எங்களுக்கு எழுதும்போது அத்தகவல்களை நாம் சேகரிக்கலாம்.
கீழ்காணும் பல்வேறு மூலங்களிலிருந்து உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பெறலாம்:
- எமது தயாரிப்புகளை அல்லது சேவைகளை ஏதேனும் ஒன்றை நீங்கள் விசாரிக்கும்போது, விண்ணப்பிக்கும்போது அல்லது பயன்படுத்தும்போது உங்களிடமிருந்தோ அல்லது உங்கள் நிதி ஆலோசகர்களிடமிருந்தோ நேரடியாக
- எமது தயாரிப்புகளை அல்லது சேவைகளை ஏதேனும் ஒன்றை நீங்கள் விசாரிக்கும்போது, விண்ணப்பிக்கும்போது அல்லது பயன்படுத்தும்போது
- சமூக ஊடகங்கள் அல்லது வலைத்தளங்கள் போன்ற பகிரங்கமாக கிடைக்கும் ஆதாரங்கள் உள்டங்கலாக மூன்றாம் தரப்பு மூலங்கள்
- எங்கள் வலைத்தளம், மொபைல் செயலிகள் அல்லது ஏனைய தொடர்பு மார்க்கங்களைப் பயன்படுத்தி நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது
நாங்கள் சேகரிக்கும் மற்றும் செயலாக்கும் தகவல்களின் பொதுவான பட்டியல்:
- அடையாள தகவல்: முழுப்பெயர், பிற பெயர்கள், பிறந்த தேதி, தேசிய அடையாள அட்டை இலக்கம், ஓட்டுநர் உரிமம் இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம் மற்றும் உங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் எந்தவொரு ஆவணத்திலோ கொண்டுள்ள பிற தகவல்கள், பாலினம், தேசியம், கையொப்பம்.
- தொடர்பு தகவல்: வீட்டு முகவரி, வீட்டுத் தொலைபேசி எண், கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள்.
- தொழில் அந்தஸ்த்து, சம்பளச் சீட்டுகள் போன்ற ஊதிய விவரங்கள், தொழில் அல்லது வியாபாரம், ஏனைய வங்கிகளில் உள்ள வங்கிக் கணக்குகள் போன்ற நிதிசார் விவரங்கள்
- சந்தை ஆய்வு தகவல்: சந்தைப்படுத்தல் கருத்துக் கணிப்புகள் அல்லது கேள்வி பதில்களில் நீங்கள் அளித்த தகவல்கள்.
- நிதி விவரங்கள்: நீங்கள் கேட்ட, பயன்படுத்தும் அல்லது பயன்படுத்திய தயாரிப்புகள் மற்றும் சேவைகள், கணக்கு எண்கள், உங்கள் கணக்குகளிலிருந்து நிகழும் நிதி பரிவர்த்தனை பதிவு, உங்கள் செலுத்தும் வரலாறு, கடன் பெறும் மற்றும் நிர்வகிக்கும் திறன்.
- புவியியல் தகவல்: செயலிகள் மூலம் இடம் கண்டறிதல், உங்களுக்கு விருப்பமான அல்லது கணக்கு வைத்திருக்கும் கிளைகள் மற்றும் பயன்படுத்தும் ஏ.டி.எம்.கள்.
- விருப்பத்தேர்வு தகவல்: நீங்கள் விரும்பும் தயாரிப்புகள் அல்லது சேவைகள், தொடர்பு கொள்ள விரும்பும் முறை.
- உங்கள் சாதனத்திற்கான தகவல்: சாதனத்தின் IP முகவரி, இயக்க முறைமை, சாதனத்தின் தொழில்நுட்ப விவரங்கள்.
- எமது வலைத்தளம் மற்றும் மொபைல் செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியான தொடர்புகள் உள்டங்கலாக நீங்கள் பார்வையிடக்கூடிய ஏனைய தளங்களில் நீங்கள் எவ்வாறு ஈடுபடுகிறீர்கள் அல்லது உலாவுகிறீர்கள் என்பது போன்ற நடத்தைத் தரவுகள்.
- ஆபத்து மதிப்பீடு: உங்கள் பரிவர்த்தனைகள் மற்றும் நடைமுறைகள் அடிப்படையில் உருவாக்கப்படும் கடன் ஆபத்து மதிப்பீடு மற்றும் பரிவர்த்தனை நடத்தை அடிப்படையில் சுயவிவரம் மற்றும் காப்பீட்டுத் தகவல்கள் போன்ற தரப்படுத்தல்.
- விசாரணை தொடர்பான தகவல்: Due diligence சோதனைகள், தடையீட்டு மற்றும் பணமோசடி தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான சோதனைகள், தொடர்புடைய தகவல் பரிமாற்றங்களின் உள்ளடக்கம் மற்றும் மெட்டா டேட்டா (metadata), இது மின்னஞ்சல்கள், குரல்/ஒலி செய்திகள் மற்றும் நேரடி உரையாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கலாம்.
- தொடர்புகளின் பதிவு: குரல் அல்லது வீடியோ பதிவுகள், மின்னஞ்சல்கள், உரையாடல் அல்லது உடனடி செய்தி தொடர்புகள், சமூக ஊடகத்தில் நடக்கும் தொடர்பாடல்கள் மற்றும் நேரடி கலந்துரையாடல்கள்.
- ஒழுங்கு மீறல் கண்காணிப்பு தகவல்: பரிவர்த்தனை விவரங்கள், சந்தேகத்திற்கிடமான மற்றும் அபூர்வ நடவடிக்கைகள், உங்கள் நிதி பரிவர்த்தனைகளில் தொடர்புடைய நபர்கள் தொடர்பான விவரங்கள்.
- பரிவர்த்தனை விவரங்கள் பற்றிய தகவல்கள், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான மற்றும் வழமைக்கு மாறான செயற்பாட்டை அடையாளம் காணுதல் மற்றும் உங்கள் நிதி பரிவர்த்தனைகள் அல்லது தொடர்புடைய செயற்பாடுகளில் தொடர்புடைய அல்லது இணைக்கப்பட்ட தரப்பினரின் விவரங்கள் போன்ற தகவல்கள்.
- உங்கள் விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளவாறு தொழில்தருநரிடமிருந்த மற்றும் உறவினர்களிடமிருந்து.
- பிற நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் (உங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை) மூலமாக, உங்கள் கணக்குகள் உள்ள நிறுவனங்கள்.
- இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் (Credit Information Bureau of Sri Lanka).
- ஏதாவது மோசடி அல்லது சட்டவிரோத செயல்களை தடுக்கும் அல்லது கண்டறியும் மூலங்கள்.
- உங்கள் சமூக ஊடக கையாளுதல்கள், தகவல் தொடர்புகள் மற்றும் ஒத்த தரவுகளை உள்ளடக்கிய சமூக ஊடகத் தளங்கள்.
- உங்கள் செயலிகளில் உள்நுழையும் போது உள்நுழைவு விவரங்கள்.
- உங்களை அடையாளம் காணவும் உங்கள் விருப்பங்களைப் பதிவுசெய்யவும் எமது வலைத்தளங்கள் மற்றும் செயலிகளில் நினைவிகள் (Cookies) மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நினைவிகள் (Cookies) என்பது, நீங்கள் பார்வையிடும் தனிப்பட்ட பக்கங்கள், குறிப்பிட்ட பக்கங்களில் செலவழித்த சராசரி நேரம், ஒரு பயனர் பக்கத்திற்குத் திரும்பும்போது அவரை அடையாளப்படுத்தல் போன்றவற்றை நீங்கள் அணுகும் வலைத்தளங்கள் மூலம் ஒரு பயனரின் சாதனத்தில் சேமிக்கப்படும் சிறிய தரவுகளாகும்.
பொதுவாக, உங்கள் தனிப்பட்ட தகவல்கள் கீழ்க்காணும் நோக்கங்களுக்காக, உங்கள் ஒவ்வொரு பரிவர்த்தனை அல்லது தொடர்பின் தன்மைக்கு ஏற்ப நாங்கள் சேகரித்து, புதுப்பித்து, பயன்படுத்துகிறோம்:
நோக்கம் |
விவரம் | குறிக்கோள் |
---|---|---|
கணக்கு அடிப்படையிலான சேவைகளுக்கான உங்கள் விண்ணப்பங்களைச் செயன்முறைப்படுத்துதல் மற்றும் எமது தயாரிப்புகளை மற்றும் சேவைகளை வழங்குதல் மற்றும் இணையவழி வங்கி வங்கிச்சேவை, தொலைபேசி வங்கிச்சேவை மற்றும் மொபைல் வங்கி வங்கிச்சேவை செயலிகளுக்கு அணுகலை வழங்குதல். |
இது, உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல், அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் உங்கள் கடன் தகுதியை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. இது, எங்களுடனான ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக, உங்கள் கணக்கு அல்லது வசதியை நிறுவி நிர்வகித்தல் மற்றும் நீங்கள் மேற்கொள்ள விரும்பும் பரிவர்த்தனைகளைச் செய்ய உதவுவதை குறிக்கிறது. மேலும், நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் இணையவழி, டிஜிட்டல் மற்றும் மொபைல் தளங்கள் மற்றும் செயலிகளுக்கான அணுகலை உங்களுக்கு வழங்குவதையும் இது உள்ளடக்குகிறது. |
உங்களுடனான எமது ஒப்பந்தத்தை செயலாற்றுதல், மேலும் உங்கள் வேண்டுகோளின் அடிப்படையில் ஒப்பந்தத்திற்கு முன்னரான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது. |
ஏதேனும் நிலுவைகளை அல்லது கொடுப்பனவுகளை அறவிடல் | நிலுவையாகவிருக்கின்ற ஏதேனும் பணத்தை அறவிடுவதற்கு மூன்றாம் தரப்பு படுகடன் அறவீட்டு முகவர்களை நாம் பயன்படுத்தலாம். அறவீட்டு தேவைப்பாடுகளுக்காக அத்தகைய முகவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளலாம். | உங்களுடனான எமது ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கும் எமது சட்டப்பூர்வ நலன்களுக்காகவும். |
இடர்நேர்வு முகாமைத்துவம் | உங்கள் தகவல்கள் நிதி, புகழ், சட்ட, ஒழுங்கு மற்றும் வாடிக்கையாளர் தொடர்பான அபாயங்களை மதிப்பீடு செய்தல், அடையாளம் காண்தல் மற்றும் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும். கொடுகடன் இடர்நேர்வு, வர்த்தக இடர்நேர்வு, தொழிற்பாட்டு இடர்நேர்வு மற்றும் காப்பீடு அல்லது உரிமைகோரல் முகாமைத்துவ நோக்கங்கள் போன்ற காப்பீட்டு இடர்நேர்வு ஆகியவை இதில் அடங்கும், | எமது சட்டப்பூர்வ நலன்களுக்காக. |
குற்றச் செயல்களை தடுக்கும் மற்றும் கண்டறியும் நடவடிக்கைகள் |
மோசடி, பணம் துய்தாக்குதல் மற்றும் பயங்கரவாத நிதியுதவி போன்ற குற்றங்களைத் தடுப்பதற்கும் கண்டறிவதற்கும் கண்காணித்தல், தணித்தல், விவரக்குறிப்பு எடுத்தல் மற்றும் இடர்நேர்வு மதிப்பீடு. வரையறையின்றி இதில் பின்வருவன அடங்கும்:
|
எங்கள் சட்ட மற்றும் ஒழுங்குமுறைப் பொறுப்புகளுடன் இணங்க செயல்படுவதற்காக. எமது சட்டப்பூர்வ நலன்களுக்காக. பொது நலனுக்காக. |
வங்கிச்சேவைத் தொழிற்பாடுகள் |
எமது வங்கி சேவைகளின் வழஙகல் மற்றும் தொழிற்பாட்டை இயலச்செய்தல் இது உள்ளடக்கக்கூடியன:
கடன் அறவீடு, சந்தை ஆராய்ச்சி, அறிக்கை அச்சிடுதல், காப்பகப்படுத்துதல் போன்ற எமது சில செயற்பாடுகளுக்கு உதவுகின்ற வெளியிலிருந்த சேவைபெறும் நிறுவனங்களுக்கு வெளிப்படுத்துதல். |
உங்களுடனான எமது ஒப்பந்தத்தை அமல்படுத்துதல். எமது சட்டப்பூர்வ நலன்களுக்காக. சட்டத்தினால் எம் மீது விதிக்கப்பட்ட ஏற்புடைய சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்படுத்தல்களுடன் இணங்கியொழுகுதல். |
எங்களது சட்டரீதியான உரிமைகளைப் பாதுகாத்தல் |
சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட எங்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கும் அல்லது பாதுகாத்து நிலைநிறுத்துவதற்கும், உதாரணமாக:
இணைப்பு, கையகப்படுத்தல் அல்லது மறுசீரமைப்பு நிகழ்வில் |
எமது சட்டப்பூர்வ நலன்களுக்காக |
சட்டப்பூர்வ கடமைகளுக்கு பதிலளித்தல் |
சட்ட அமுலாக்க முகவர்களும், நீதிமன்றமும், சட்டத்தால் நிறுவப்பட்ட ஏதேனும் நியாயசபையும், இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகளும், நிதி உளவுத்துறை, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு, உள்நாட்டு வரித்துறை, நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் கடன் தகவல் பணியகம் போன்ற சட்டரீதியான நிறுவனங்களுக்குப் பதிலளிக்க. ஏற்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின்படி செல்லுபடியாகும் சட்ட கோரிக்கையின் பிரகாரம் மாத்திரம் தகவல் வெளியிடப்படுவதை நாம் உறுதிசெய்கிறோம். |
சட்டத்தினால் எம் மீது விதிக்கப்பட்ட ஏற்புடைய சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்படுத்தல்களுடன் இணங்கியொழுகுதல். |
தயாரிப்பு அல்லது சேவை மேம்படுத்தல் |
வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்திசெய்ய நாம் சிறந்த நிலையில் இருக்கும் வகையில் எமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான மேம்பாடுகளை அடையாளம் காண்பதற்கு. டிஜிட்டல் மற்றும் ஏனைய தளங்கள் உள்டங்கலாக எமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தும் போது உங்கள் நடத்தையிலிருந்து சேகரிக்கப்படும் செலவு முறைகள், கட்டண வரலாறு அல்லது நிதி நடவடிக்கைகள் போன்ற பரிவர்த்தனைத் தரவுகளைப் பயன்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த மற்றும் பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சேவைகளை நாம் வழங்குவோம். நாம் பயன்படுத்தும் தரவு பயனர் அடையாளங்களை வெளிப்படுத்தாது. | எமது சட்டப்பூர்வ நலன்களுக்காக |
வாடிக்கையாளர்களுக்கு மேலதிக தயாரிப்புகளின் விற்பனை மற்றும் விலையுயர்ந்த தயாரிப்புகளின் விற்பனை உள்ளிட்ட சந்தைப்படுத்தல் | எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், மேலும் எமது பங்காளர்கள் மற்றும் தொடர்புடைய மூன்றாம் தரப்பினரின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களை, அஞ்சல், மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள் (SMS), மெசேஜிங் செயலிகள், மொபைல் செயலி மற்றும் பாதுகாப்பான செய்திகளின் மூலம், அத்துடன் சமூக ஊடக விளம்பரங்கள் வழியாகவும் உங்களுக்கு வழங்குவதற்காக. |
ஏற்புடையவாறு உங்கள் ஒப்புதலுடன். எமது சட்டப்பூர்வமான நலன்களுக்காக. |
தரவுப் பகுப்பாய்வு |
எமது சலுகைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய ஆழமான நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும், வாடிக்கையாளர் விருப்பங்களுடன் ஒத்துப்போகும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கும், மிகவும் திறமையான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை உறுதிப்படுத்துவதற்கும், குறிப்பான தேவைகளை பூர்த்தி செய்யும் தீர்வுகளை வழங்குவதன் மூலம் பயனர் திருப்தியை அதிகரிக்கவும், தரவுகளை பகுப்பாய்வு செய்யவும். பரிவர்த்தனை தகவல்களை பகுப்பாய்வு செய்தல், செலவிடும் முறைகள், வரலாற்று தரவுப் பகுப்பாய்வு மற்றும் பயனர் செயற்பாட்டின் ஒப்பீடு ஆகியவை இதில் அடங்கும். |
ஏற்புடையவாறு உங்கள் ஒப்புதலுடன். எமது சட்டப்பூர்வமான நலன்களுக்காக |
சுயவிவரம் உட்பட, உங்களைப் பற்றிய தீர்மானங்ளை எடுத்தல் |
நீங்கள் எங்களிடமிருந்து கடன் வசதியைப் பெறும்போது, உங்கள் கடன் தகுதி மற்றும் இடர்நேர்வு மதிப்பீடு போன்ற சில தீர்மானங்களை எடுக்க எங்களுக்கு உதவ, தானியங்கி முறைமைகளை (Automated Systems) நாம் பயன்படுத்தலாம். மேலும், ஏதேனும் மோசடி அல்லது நிதி குற்றங்களை எங்களுக்கு சமிக்ஞைப்படுத்த, அல்லது அதிகாரமளிக்கப்படாத ஒருவர் உங்கள் கணக்குகள்/அட்டைகளைப் பயன்படுத்துகிறாரா என்பதை அடையாளம் காண, தானியங்கி முறைமைகள் பயன்படுத்தப்படலாம். |
எமது சட்டப்பூர்வ நலன்களுக்காக |
தொடர்பாடல்களை முகாமை செய்தல் | நீங்கள் எங்களுடன் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள், மின்னஞ்சல்கள், நேரடி உரையாடல்கள், வீடியோ உரையாடல்கள் மற்றும் பிற தகவல்தொடர்புகள் போன்ற தகவல்களை, வினவல்கள் மற்றும் புகார்கள் தொடர்பாக பதிலளிக்க, நீங்கள் வழங்கிய வழிமுறைகளை சரிபார்க்க, எங்கள் பணியாளர்களை பயிற்றுவிக்க, அபாயங்களை நிர்வகிக்க, மற்றும் மோசடி அல்லது பிற குற்றச்செயல்களை தடுக்கும் மற்றும் கண்டறியும் நோக்கத்திற்காக நாங்கள் சேமித்து வைத்திருக்கலாம். | எமது சட்டப்பூர்வ நலன்களுக்காக |
நாங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பான கணினி சேமிப்பு வசதிகள், காகித அடிப்படையிலான கோப்புகள் மற்றும் பிற பதிவுகள் ஆகியவற்றின் சேர்க்கையில் சேமிக்கின்றோம். நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவுகள் தவறான பயன்பாடு, இழப்பு, அனுமதியில்லாத அணுகல், மாற்றம் அல்லது வெளிப்பாடு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தரவு பரிமாற்றம் மற்றும் சேமிப்பு செயல்முறைகள் இரகசியத்தன்மை, முழுமை மற்றும் கிடைப்புத் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில், தொழில்துறையில் ஏற்கப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
எமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உங்களுக்கு வழங்கவும், உங்களுடனான எமது உறவை நிர்வகிக்கவும், அடையாளம் காணக்கூடிய வடிவத்தில் உங்கள் தரவுகளை எவ்வளவு காலம் வைத்திருக்கிறோம் என்பதைக் குறிக்கும் தரவு தக்கவைத்தல் கொள்கையை நாங்கள் உள்ளகமாக பின்பற்றுகிறோம். பொதுவாக, வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் ஆறு (6) ஆண்டுகள் அல்லது நீங்கள் எமது வாடிக்கையாளராக இருப்பதை நிறுத்தியதிலிருந்து, சட்ட மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்கிணங்க, குறிப்பிட்ட காலத்திற்கு தக்கவைக்கப்படும்.
பின்வரும் சூழ்நிலைகளில் ஒரு (01) வருடம் அல்லது அதற்கும் குறைவான தக்கவைப்பு காலத்தை நாம் பினபற்றலாம்.
- உங்களுடன் தொடர்பு கொண்டதற்கான ஏதேனும் பதிவுகள்
- இணைய நினைவிகளில் (internet cookies) சேமிக்கப்பட்ட தரவுகள்
எனினும், பின்வரும் சூழ்நிலைகளில் உங்கள் தரவுகளை ஆறு (06) ஆண்டுகளுக்கும் மேலாக நாம் வைத்திருக்கலாம்:
- ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் சட்ட அமுலாக்க முகவர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க
- சட்ட மற்றும் ஒழுங்குமுறைபடுத்தல் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு
- ஆராய்ச்சி அல்லது புள்ளிவிவர நோக்கங்களுக்காக
- நடந்துகொண்டிருக்கும் பிணக்குகள் அல்லது வழக்குகளுக்கு பதிலளிப்பதற்கு
உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தேவையில்லாத நிலையில் அல்லது அவற்றை வைத்திருக்க சட்டப்படி தேவையில்லை அல்லது அனுமதி இல்லை என்றால், நாங்கள் அவற்றை நீக்கவோ அல்லது அடையாளம் காண முடியாத வகையில் மாற்றவோ செய்கிறோம்.
உங்கள் தரவுகள் இரகசியமாக வைக்கப்படும், ஆனால் பின்வரும் சூழ்நிலைகளில் மூன்றாம் தரப்பினருக்கு அத்தகைய தகவல்களை நாம் வழங்கலாம்:
- எங்களுக்கு ஆதரவுச் சேவைகளை வழங்குவதற்கு வெளிப்புற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளவிடத்து. விண்ணப்பம் அல்லது கட்டளைகளை செயன்முறைப்படுத்தல், சந்தைப்படுத்தல் ஆதரவு, விநியோகங்கள், சந்தை ஆராய்ச்சி மற்றும் கடன் அறவீடு ஆகியவை இதில் அடங்கும், ஆனால் அவற்றுக்கு மாத்திரம் மட்டுப்படாது. இச்சேவை வழங்குநர்கள் இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் அமைந்திருக்கலாம்.
- எமது சட்ட மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கடப்பாடுகளுடன் இணங்க செயல்படுதல்.
- சட்டவிரோதமான செயற்பாடு நடந்ததாகவோ அல்லது நடக்கக்கூடும் என்று நாம் சந்தேகிக்குமிடத்து அத்தடன் அத்தகைய விஷயத்தில் தேவையான சட்ட அமுலாக்க அல்லது ஏனைய சட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடுசெய்யும் போது தனிப்பட்ட தரவு எமது விசாரணையின் அவசியமான பகுதியாகும் போது. பின்வரும் சூழ்நிலைகளின் போதும் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களையும் நாம் வெளியிடலாம்.
- நீங்கள் நிறுவனத்தால் அல்லது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடன் அட்டையை வைத்திருந்தால், உங்கள் தனிப்பட்ட தரவுகளை உங்கள் சம்பந்தப்பட்ட வேலை வழங்குநருடன் அல்லது அரசாங்க நிறுவனத்துடன் தனிப்பட்ட தரவுகளை நாம் பரிமாறிக்கொள்ளலாம்.
- நீங்கள் கோரும் தயாரிப்புக்களை மற்றும் சேவைகளை உங்களுக்கு வழங்கவும், ஏனைய வங்கி தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கவும் எம்முடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு.
- உங்களுக்கு கடன் வழங்குகின்ற அல்லது எங்களுடன் நீங்கள் வைத்திருக்கும் ஏதேனும் ஒப்பந்தத்தின் கீழ் நீங்கள் செலுத்த வேண்டிய தொகைகளை உங்களிடமிருந்து அறவிடுவது தொடர்பான கடன் அறிக்கையிடல் நிறுவனங்களுக்கு. மூன்றாம் தரப்பினர் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பது குறித்து நாம் கடுமையான பாதுகாப்பு மற்றும் இரகசியத்தன்மை தேவைப்படுத்தல்களை விதிக்கிறோம். எமது வெளிவாரி ஒப்பந்தக்காரர்களுக்கு அவர்களின் சேவைகளை மேற்கொள்வதற்கு தேவையான தகவல்களை மாத்தரம் நாம் வழங்குகிறோம். எங்களுக்கு சேவையை வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் தகவல்களைப் பயன்படுத்த அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
- வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை, நிர்வகிக்கப்பட்ட நிதி முதலீடு மற்றும் வெளிப்புற பணியாளர்களைப் பயன்படுத்தக்கூடிய பிற சேவைகள் போன்ற உங்கள் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் நோக்கில்.
- நீங்கள் அவ்வப்போது தகவல்களை வெளிப்படுத்த எங்களுக்கு அனுமதி அளிக்கும் பிற நபர்களுக்கு.
உங்கள் தனிப்பட்ட தரவுகள் இலங்கைக்கு வெளியே உள்ள இடங்களுக்கு அனுப்பப்பட்டு சேமிக்கப்படலாம். தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஏற்பாடுசெய்யப்பட்டவாறு தனிப்பட்ட தரவுகளுக்கு அதே அளவிலான பாதுகாப்பு இல்லாத நாடுகளும் இதில் அடங்கும். இலங்கைக்கு வெளியே தனிப்பட்ட தரவுகளை நாம் அனுப்புகின்றபோது, அத்தகைய பரிமாற்றமானது தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கும் ஏனைய ஏற்புடைய சட்டங்களின் கீழ் ஏற்புடைய சட்டத் தேவைகளுக்கும் ஏற்ப இருப்பதை உறுதிசெய்வோம், மேலும் உங்கள் தனிப்பட்ட தரவுகளுக்கு போதுமான அளவிலான பாதுகாப்பை உறுதிசெய்வோம்.
உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாம் எவ்வாறு செயன்முறைப்கடுத்துகின்றோம் என்பது தொடர்பாக தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உங்களுக்கு பின்வரும் உரிமைகள் உள்ளன. பின்வரும் உரிமைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்த, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு விவரங்கள் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
உரிமை | விபரம் |
---|---|
அணுகல் |
உங்களைப் பற்றிய ஏதேனும் தகவலை நாம் செயன்முறைப்படுத்தினால் நீங்கள் உறுதிப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளலாம், அவ்வாறெனில் நாம் வைத்திருக்கும் உங்கள் தனிப்பட்ட தரவுகளை அணுக நீங்கள் கோரலாம். மேலும், இந்த தனியுரிமைக் குறிப்பு (Privacy Notice) இல் குறிப்பிடப்பட்ட எந்தவொரு விடயத்தையும், வங்கியின் தனியுரிமைக் கொள்கைக்கு ஏற்ப, நீங்கள் விரிவாகத் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம். |
ஆட்சேபனை |
எங்கள் நியாயமான நலன்கள் அல்லது பொது நல நோக்கங்களுக்காக உங்கள் தகவல்களை செயலாக்குவதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம். இந்த நோக்கங்கள் வங்கியின் தனியுரிமைக் கொள்கைக்கு ஏற்ப, தனியுரிமை அறிவிப்பில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளன. |
விலக்கிக்கொள்ளல் |
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உங்கள் தரவுகளைச் செயன்முறைப்படுத்த நாம் உங்கள் சம்மத்தைக் கோரியிருந்தால், நீங்கள் எந்த நேரத்திலும் அந்த ஒப்புதலை திரும்பப் பெற முயற்சிக்கலாம். சம்மத்தை விலக்கிக்கொள்ளலானது நீங்கள் விலக்கிக்கொள்ளும் வரை நாம் மேற்கொண்ட ஏதேனும் செயன்முறைப்படுத்தலை செல்லுபடியற்றதாக்காது. |
திருத்தம் |
செயன்முறைப்படுத்தல் தவறான தரவுகளைச் சரிசெய்வதற்கு அல்லது முழுமையற்ற தரவுகளை பூரணப்படுத்துவதற்கு நீங்கள் கோரலாம். |
அழித்தல் | உங்கள் தரவுகளை தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்மைவாக முரணாக நாம் செயன்முறைப்படுத்துகின்றோம் என்று நீங்கள் கண்டறிந்தால் அல்லது முன்னைய சந்தர்ப்பத்தில் உங்கள் சம்மத்தை நீங்கள் விலக்கிக்கொண்டிருந்தால் உங்கள் தனிப்பட்ட தரவுகளை அழிக்குமாறு நீங்கள் கோரலாம். ஏற்புடைய சட்டங்களின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்படி உங்கள் தரவுகளை நாம் அழிக்கலாம். |
தானியக்கமாக தனிப்பட்ட தீர்மானங்ளை மேற்கொள்ளல் |
தானியக்கமான வழிமுறைகளைப் பயன்படுத்தி (ஏதேனும் மனித ஈடுபாடும் இன்றி) உங்களைப் பற்றி நாம் ஏதேனும் தீர்மானம் எடுத்திருந்தால், அத்துடன் அத்தகைய தீர்மானம் உங்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களில் மீளமுடியாத மற்றும் தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தினால் அல்லது உருவாக்க வாய்ப்பிருந்தால், அத்தகைய தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு நீங்கள் எங்களிடம் கோலராம். |
விதிவிலக்குகள் |
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்மைவாக தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு, ஏதேனும் எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் நடந்துகொண்டிருக்கும் விசாரணை, நடத்தப்படும் புலனாய்வு அல்லது நடவடிக்கைமுறை, குற்றவியல் தவறுளைத் தடுத்தல், தடுத்துவைத்தல், விசாரித்தல் அல்லது வழக்குத் தொடுத்தல், மற்றவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம், உரிமையைச் செயன்முறைப்படுத்துவதற்கான எமது தொழில்நுட்ப மற்றும் செயற்பாட்டு சாத்தியக்கூறு, தரவுடன் தொடர்புபட்டவராக உங்கள் அடையாளத்தை நிறுவ எமது இயலாமை, ஏதேனும் எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் உங்கள் தரவுகளைச் செயன்முறைப்படுத்த ஏதேனும் தேவைக்கும் உட்பட்டிருத்தல் போன்ற சில காரணங்களைக் கருத்தில் கொண்டு, கோரிக்கையை நிராரிக்க எமக்கு உரிமை உண்டு. |
தரவுப் பாதுகாப்பு அதிகாரசபை |
மேற்குறித்த உரிமைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவதற்கான கோரிக்கை தொடர்பாக எங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு பதிலில் நீங்கள் திருப்தியடையவில்லை என்றால், இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையிடம் மேன்முறையீடு செய்ய உங்களுக்கு உரிமை உண்டு. அவர்களின் தொடர்பு விவரங்கள் மற்றும் மேன்முறையீட்டை எவ்வாறு மேறகொள்வது என்பது பற்றிய மேலதிகத் தகவல்களை உத்தியோகப்பூர்வ வலைத்தளமான www.dpa.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் நீங்கள் காணலாம். |
உங்களுக்கு ஏதேனும் மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால் அல்லது உங்கள் உரிமைகளைப் பயன்படுத்த விரும்பினால், பின்வரும் முறையில் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்:
- நேஷன்ஸ் டிரக்ட் மொபைல் செயலி, FriMi அல்லது நேஷன்ஸ் டிரக்ட் எண்டர்பிரைஸ் செயலி ஊடாக
- எமது உடனடி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம்: (+94) 114 711411
- எமது எந்தவொரு கிளைக்கும் வருகை தருவதன் மூலம்: https://www.nationstrust.com/branches
- நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி, தலைமை அலுவலகம், இல. 46/58, நவம் மாவத்தை, கொழும்பு 02 இல் தரவுப் பாதுகாப்பு அதிகாரியைத் தொடர்பு கொள்வதன் மூலம்
- எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம்: customerservice@nationstrust.com
Get in touch