உங்கள் கருத்தை நாம் வரவேற்கின்றோம்

உங்கள் கருத்தை நாம் வரவேற்கின்றோம்
உங்கள் கருத்தை நாம் வரவேற்கின்றோம்

 

 

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஆகிய எம்மை நம்பி தமது நிதித் தேவைகளை எம்மிடம் ஒப்படைத்த எமது வாடிக்கையாளர்களுக்கு எமது தயாரிப்பு மற்றும் சேவைகள் ஊடாக அவர்களது எதிர்பார்ப்புகளை உறுதிப்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். எமது சேவைகளில் ஏதாவது திருப்தியற்ற அனுபவமோ அல்லது உங்களது பரிந்துரைகள் எமது சேவையின் தரத்தை மேம்படுத்த உதவும் என நீங்கள் நினைத்தால், அதைப்பற்றி எமக்கு அறிவியுங்கள். எம்மை அணுக கீழுள்ள விருப்பத் தேர்வில் ஒன்றை நீங்கள் பின்பற்றலாம்.

 

உங்கள் புகார்களை எமக்கு எழுத்து மூலம் அனுப்புங்கள் :

முகாமையாளர் வாடிக்கையாளர் அனுபவ பிரிவு
நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி
தலைமை அலுவலகம்.
242, யூனியன் பிளேஸ், கொழும்பு 2.
கையடக்க தொலைபேசி: 0743 565 656

 

மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள்:

customerservice@nationstrust.com

 

எமது உடனடி இலக்கத்தை 24/7 நேரமும் அழைக்கலாம்:

011 4711411 டயல் செய்து 5 ஐ அழுத்தவும்

 

உங்களுக்கு விருப்பமான வங்கிக் கிளைக்குச் சென்று உங்கள் புகாரை நேரில் தெரிவிக்கவும்

 

பக்கத்தின் கீழ்பகுதியிலுள்ள படிவத்தை நிரப்புங்கள்

 

உங்கள் புகார்களை நாம் இவ்வாறு தான் தீர்க்கின்றோம்

படிமுறை 1: மேற்குறிடப்பட்டுள்ள ஏதாவது இடத்தில் எம்மை அணுகி உங்களால் புகாரளிக்க முடியம். எமது பிரதிநிதிகளிடமிருந்து உங்கள் புகார் குறிப்பு இலக்கத்தை பெறுங்கள்.

படிமுறை 2: உங்களால் புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன், வங்கிப் பிரதிநிதி ஒருவர் உங்களை தொடர்பு கொள்வார். உங்கள் புகார் தீர்க்கப்படும் வரை அர்ப்பணிக்கப்பட்ட பிரதிநிதியாக அவர் உங்களுக்கு உதவுவார்.

படிமுறை 3: உங்களது புகார் உடனடியாக அல்லது 3 வேலை நாட்களுக்குள் தீர்ப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

படிமுறை 4: இருந்தாலும் உங்கள் புகாரின் சிக்கல் தன்மையை பொறுத்து, உங்கள் புகாரைத் தீர்க்க எமக்கு அதிக நேரம் தேவைப்பட்டால், அதனை உங்களுக்கு தெரிவிப்போம்.

படிமுறை 5: வங்கி முன்வைத்த முடிவில் உங்களுக்கு திருப்தி இல்லையெனின், தயவுசெய்து உங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வங்கி பிரதிநிதிக்கு அதனை தெரிவிக்கவும். இதற்கு மேலதிகமாக என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என பார்ப்போம்.

படிமுறை 6: உங்களுக்கு முழுத் திருப்தி ஏற்படும் வரை உங்கள் புகாரை தீர்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். நீங்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்காவிடின், இலங்கை அலுவலகத்திலுள்ள நிதி ஒம்புட்ஸ்மென் அல்லது இலங்கை மத்திய வங்கியின் நிதி வாடிக்கையாளர் திணைக்களத்தை உங்களால் அணுக முடியும்.

 

நிதி ஒம்புட்ஸ்மென் தொடர்பு விபரங்கள்:

143A, வஜிர வீதி, கொழும்பு 5.
தொலைபேசி+94 11 2595624  
பெக்ஸ்: +94 11 2595625
மின்னஞ்சல்fosril@sltnet.lk
இணையதளம் www.financialombudsman.lk

நிதி வாடிக்கையாளர் திணைக்கள தொடர்பு விவரங்கள்:

30, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01.
பெக்ஸ்+94 112477966  
இணையதளம்: https://www.cbsl.gov.lk/en/fcrd

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

ஏதேனும் கேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்ளவும்